சிலந்தியைக் கொல்ல முழு வீட்டுக்கு தீ மூட்டிய நபர்; அமெரிக்காவில் சம்பவம்அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் சிலந்தி பூச்சியை தீயிட்டு கொல்ல முயன்ற போது வீடு முழுவதும் எரிந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் மிகப்பெரிய சிலந்தி பூச்சி இருந்தது.

அதை அடித்து கொல்ல முயன்றார். அது தப்பித்துக் கொண்டே இருந்தது. எனவே மிகப்பெரிய ‘பர்னர்’ மூலம் தீயிட்டு கொல்ல முயன்றார்.

அப்போது அந்த தீ வீட்டில் இருந்த திரைசீலையில் பிடித்து பொருட்கள் மீதும் பரவியது. பின்னர் தீ வீடு முழுவதும் எரிந்தது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். முன்னதாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...