அதாஉல்லா இம்முறை மகன்மார்கள் தவிர்த்து வேறு ஒருவரை மேயராக்குவாரா?


தேசிய காங்கிரஸ் மிகவும் பிரபலமாக உள்ள, அல்லது அதிக வாக்குகளை வைத்துள்ள அக்கரைப்பற்றில் தற்பொழுது உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது,

 அக்கரைப்பற்று மாநகர சபை ஆரம்பிக்கப்பட்ட முதல் சபைக்கு மேயராக  அதாஉல்லா தன்னுடைய மகனை நியமித்து அழகுபார்த்தார், அப்போது அவர் வசம் உள்ளுராட்சி அமைச்சும் இருந்தது. ஆனால் இப்பொழுது அவர் வசம் ஆகக்குறைந்தது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லை. இந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்ற பாரிய சவால் இருந்தாலும் இந்த தேர்தலில் கடந்த முறைக்கு மாற்றமாக தன்னுடைய இரண்டு புதல்வர்களை களமிறக்கியுள்ளார். இது அவர் பார்வைக்கு சரியாக இருந்தாலும் வாரிசிஸ்ம் என்ற கோட்பாட்டை மீளவும் அக்கரைப்பற்று மக்கள் ஏற்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,

அக்கரைப்பற்று மாநகர சபையை தேசிய காங்கிரஸ் பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றுமாக இருந்தால் அடுத்த மேயராக மகன்மார்கள் தவிர்த்து வேறு ஒருவரை நியமிப்பாரா?

 அப்படி நியமிக்கப்பட்டால் அதற்கு தகுதியானவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது, பட்டியலில் பஹிஜூம் இல்லை மேயர் என்று பேசப்பட்ட சபீஸ் - அஸ்மி ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்பட சாத்தியம் இருப்பதாக தோன்றுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் அதாஉல்லாவின் வியுகம் எப்படி அமையப்போகிறது என்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...