ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் குறித்து தீர்வு காண்பதில் சட்ட முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடையீட்டு மனுதாரராக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர.டி.சில்வா, 19ஆவது திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுக்கு மட்டுமானது என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தனது இணையத்தளத்தில் கூட பதவிக்காலத்தை மட்டுப்படுத்துவதாகக் கூறியுள்ளார். ஐந்து வருடங்களாக குறைக்க ஜனாதிபதி ஏற்கனவே இணங்கியுள்ளார்” என்றும் சட்டத்தரணி மனோகர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏழு இடையீட்டு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பில் வாய்மூல விளக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனு தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நியமித்துள்ளார். பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 129 (1) சரத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய தன்னுடைய பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரியிருந்தார்.
இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், மனோகர.டி.சில்வா, அலி சப்ரி, பைசர் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி கல்யாணந்த தீரணாகம உள்ளிட்டோர் ஆஜராகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள்
Reviewed by NEWS
on
January 12, 2018
Rating:
