ஈரானின் விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை


ஈரானின் உள்ளக விவகாரங்களில் தலையிடவேண்டாம் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா அவசர கூட்டமொன்றை கோரியமை தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவது ஐக்கிய நாடுகள் சபையின் நம்பிக்கைக்கு பாதகமாகும் என ஐ.நா. வுக்கான ரஷ்ய தூதுவர் வெசிலி நெதென்சியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா அதன் அதிகாரத்தை தவறான முறையில் பிரயோகிப்பதாக ஐ.நா. வுக்கான ஈரானின் தூதுவரும் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை ஈரானின் விவகாரங்களில் தலையிட வேண்டாமென அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை Reviewed by NEWS on January 09, 2018 Rating: 5