குளத்தில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.காலி – மக்குலுவ முஸ்லிம் பள்ளிவாசலில் உள்ள குளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்களே இதன் போது உயிரிழந்தவர்களாவர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர்களென பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன் போது, ஒரு இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பள்ளிவாசலில் உள்ள குளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்கள் பலி
Reviewed by NEWS
on
January 02, 2018
Rating:
