பெசில் ராஜபக்‌ஷவிடம் என் எம் அமீன் விஷேட வேண்டுகோள்!மஹிந்த ராஜபக்‌ஷவின்  தேர்தல் வெற்றியை தொடர்ந்து நாட்டின் சில பிரதேசங்களில்  முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் தான் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷவை அறிவுறுத்தியுள்ளதாகவும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில்  கருத்து வெளியிட்ட என் எம் அவர்கள் குறிப்பிடுகையில் ,

அரசியல் காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை முன்னிறுத்தி ஓரிரு சம்பவங்கள் நாட்டின் சில பகுதிகளில் பதிவாகியிருப்பதாகவும் இது தொடர்பில் தான் பெசில் ராஜபக்‌ஷவை அறிவுறுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் தான் அவசரமாக கவனமெடுப்பதாக கூறியுள்ள பெசில் ராஜபக்‌ஷ கடந்த தேர்தல்களை விட முஸ்லிம்கள் தங்களுக்கு அதிகமாக ஆதரவு வழங்கியுள்ளதாகவும் எவ்வாறாயினும் இந்த சந்தர்பத்தில் அரசியல் முரண்பாடுகளை இனவாத பிரச்சினையாக்க கூடாது எனவும் குறிப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுஜன பெரமுன தங்கள் ஆதரவாளர்களுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றை உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...