உள்ளுராட்சி தேர்தலால் சலிப்படைந்த மஹிந்த தேசப்பிரிய!உள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும்  தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய.

கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்பான வேலைகளை மேற்கொண்டு நான் மிகவும் களைத்து விட்டேன். இந்த வேலைகளையெல்லாம் யாரிடமாவது கொடுத்து விட்டு, குறைந்தது ஒரு மாதத்துக்கு விடுமுறையில் சென்று ஓய்வெடுப்பதே நல்லது என நினைக்கிறேன். இதற்கு அரசியலமைப்பு இடமளித்திருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களை அரசிதழில் வெளியிட்ட பின்னர், இதுபற்றி நான் யோசிக்கவுள்ளேன்.

வேறு காரணங்கள் எதுவுமில்லை. நான் மிகவும் களைத்துப் போய் விட்டேன்” என்றும் அவர் சலிப்புடன் கூறியுள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலால் சலிப்படைந்த மஹிந்த தேசப்பிரிய! உள்ளுராட்சி தேர்தலால் சலிப்படைந்த மஹிந்த தேசப்பிரிய! Reviewed by NEWS on February 23, 2018 Rating: 5