தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 1, 2018

ஓட்டமாவடி சபீர் மெளலவியினை வெற்றியடைய செய்யுமாறு பிரதமர் வாழைச்சேனையில் பகிரங்க வேண்டுகோள்ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்காக ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் யானை சின்னத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவோடு சேர்ந்து வேட்பாளராக களத்தில் குதித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பாளரும், பிரதேசத்தில் இளைஞர்களை சிந்திக்க தூண்டுகின்ற சமூக சேவையாளருமான சபீர் மெளலவியினை வெற்றியடைய செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று 31.01.2018 வாழைச்சேனையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் பகிரங்க வேண்டுகோள் விடுத்தமையானது சபீர் மெளலவியின் வெற்றியினை மேலும் உறுதிப்படுத்திய விடயமாக மாறியுள்ளது.

மேலும் பிரதமர் ரணி விக்ரமசிங்க பொதுக்கூட்டத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக உரையாற்றுகையில்…. பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த ஹனீபா ஜீ.எஸ் (மம்மலி விதானை) இறுதிக்கட்டத்தில் வேறு கட்சியில் களமிறங்கி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுவதினால் அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கட்சியின் செயலாளர் கபீர் காசிமுக்கு உடனடியாக கட்டளை இடுவதாக தெரிவித்தார்.

அத்தோடு ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் சபீர் மெளலவிக்கு ஒட்டு மொத்த வாக்காளர்களும் வாக்களித்து அவரை உறுப்பினராக தெரிவு செய்யுமாறும் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். அதனோடு சேர்த்து சபீர் மெளலவியின் பிரதேச சபை உறுப்பினர் பதவிக்கு பிரதமர் பொறுப்புதாரி என்பதனையும் பகிரங்கமாக வாழைச்சேனை பொதுக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தமையானது சபீர் மெளலவியின் வெற்றியினை நூறு விகிதம் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் உறுதிப்படுத்திய விடயமாக மாறியுள்ளதோடு ஓட்டமாவடி பிரதேச சபை அரசியலிலும் முக்கிய பேசும் பொருளாகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. .


Post Top Ad

Your Ad Spot

Pages