தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 15, 2018

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பணி அபிவிருத்தியை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நடந்து முடிந்த உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் அபிவிருத்தியை நோக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்அவர் தெரிவித்துள்ளதாவது,

கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக கைகோர்த்து எமக்குள்ளே எதுவித பிரிவினையும் இல்லாமல், எமது மண்ணில் பிறந்த அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக இருந்து, எமது மண்ணுக்காக புறப்பட்ட அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். எமது பிரதேசத்தில் நீண்ட காலமாக எதுவித அபிவிருத்தியும் இல்லாமல் இருந்து வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் அபிவிருத்திக்காக முன்னின்று கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Post Top Ad

Your Ad Spot

Pages