அமைச்சர் றிசாட்டுக்கு இந்த தேர்தல் வீழ்ச்சியே! ஓர்ஆய்வுநடந்த முடிந்த உள்ளூராட்சி தேர்தலானது கட்சிகள் தமது செல்வாக்கை வெளிக்காட்டும் சரியான தளமாக பாவித்தன. அத்தோடு தமது கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கும் களமாகவும் பாவித்துக் கொண்டன.

அந்த வகையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கட்சி அதிக சபைகளை கைபற்றி சிங்கள மக்களின் அதிகப் பெரும்பான்மை ஆதரவை பெற்ற தலைவராக நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதேவேள பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி 41 உள்ளூராட்சி மன்றங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 7 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி 34 உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் 12 உள்ளூராட்சி மன்றங்களிலும் முன்னிலை பெற்றிருந்தாலும், ஒரு சில இடங்களில் அக்கட்சிகள் தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அமைச்சர் றிசாட் பதூர்தீன் தலைமையிலான அ.இ.ம.கா கட்சியானது வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் தான் ஒரு தேசியத் தலைவனாக காட்டிக்கொள்ளவும் தனது கட்சியை தேசியக் கட்சியாக காட்டிக்கொள்ளவும் தனியாகவும் ஐ.தே காவுடன் சேர்ந்தும் நாடு பூராகவும் போட்டி ஈட்டி இருந்தது.

எனினும் அமைச்சர் றிசாட்டின் சொந்த மாவட்டத்தின் உள்ள ஒரேஒரு முஸ்லிம் சபையான முசலியை அவரால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெறமுடியாது போனமையானது அவருக்கான பாரிய இளப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது ஏனெனில் கடந்த காலங்களில் அச்சபையின் முழு ஆட்சியுத் அவரது கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மன்னார் நகர சபை மன்னார் பிரதேச சபை, புத்தளம், வவுனியா என அவரது ஆதரவு தளங்கள் அத்தனையிலும் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதோடு வடக்கே கடந்த காலங்களில் இருந்த ஒரு சபையேனும் ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தெரியவில்லை. இது அமைச்சர் றிசாட்டின் ஆதரவு தளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியாகவே பார்க்கவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் கடந்த காலங்களில் அவரின் கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா போன்ற சபைகளும் அந்தந்த பிரதேசங்களில் பாராளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் இருந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனமையும் பாரிய இளப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அமைச்சர் றிசாட் பதூர்தீன் நாடுமுழுவதும் ஓடியதை தவிர்த்து அவரின் கட்சிக்கு காலாகாலம் இருந்து வந்த இந்த சபைகளில் கூடிய கரிசனை காட்டி இருந்தால் ஒரு வேளை இவைகளை தக்க வைத்துக்கொண்டு இருக்கலாம் என்று பிரதேச கட்சிப் போராளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ இத்தேர்தலில் றவூப் ஹக்கீம், ஹிஸ்புள்ளா, அதாவுல்லா ஆகியோர் தமது ஆதரவு தளங்களை தக்கவைத்தது மட்டுமல்லாமல் மு.கா கட்சிக்கு மேலும் சபைகள் கிடைத்துள்ளமையானதுடன் நோக்குகையில் அமைச்சர் றிசாட்க்கு இத்தேர்தல் பின்னடைவாகானதோடு அம்பாறை மாவட்டத்தை நம்பி கையில் இருந்த சபைகளை விட்டதாகவே பார்க்கவேண்டியுள்ளது.

முசலியூரான்
அமைச்சர் றிசாட்டுக்கு இந்த தேர்தல் வீழ்ச்சியே! ஓர்ஆய்வு அமைச்சர் றிசாட்டுக்கு இந்த தேர்தல் வீழ்ச்சியே! ஓர்ஆய்வு Reviewed by NEWS on February 12, 2018 Rating: 5