சியம்பலாண்டுவயில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகளை மூடிவிடுமாறு சிங்களவர்கள் உத்தரவு!

NEWS
0 minute read


மொனராகலை -  சியம்பலாண்டு நகரில்  உள்ள வர்த்த நிலையங்களை மூடுமாறு அங்குள்ள சிங்களவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம்கள், தங்கள் வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வெளியேறியுள்ளனர்.

இன்று -28- மாலையில் இச்சம்பவம் சியம்பலாண்டுவ  பகுதியில் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அதேவேளை குறித்த பகுதியில் சிங்களவர்களில் சிலர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ள சிங்களவர்களை விடுவிக்க கோரியே எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
To Top