பொதுபலசேனாவின் முக்கியஸ்தருக்கு முக்கியத்தும் கொடுத்து அவரை மஹியங்கனையின் சு.கட்சி அமைப்பாளாராக ஆக்கியது மட்டுமல்ல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கை சின்னத்தில் போட்டியும் இட வைத்தார் மேண்மைதாங்கிய ஜனாதிபதி மைத்திரி அவர்கள்.
சிங்கள மக்கள் அந்த இனவாதியை படுதோல்வியடைய வைத்துள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதே போன்றுதான் கடந்த பாரளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட இந்த ஞானசாராவை சிங்கள மக்கள் படுதோல்வியடை வைத்திருந்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.
இதே போன்று இந்த ஞானசாரா அவர்களை மஹிந்த அவர்கள் ஒருநாளும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேசவும் இல்லை, அதே போன்று அரச ஊடகங்களிலும் இவரை பேச அனுமதிக்கவுமில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் பல முறை ஞானசாராவுடன் மந்திராலோசனை நடத்தியுள்ளதும் மட்டுமல்லாமல் நாளு படை போட்டு தேடிய ஞானசாராவை சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டு காப்பாற்றியுமிருந்தார். இதே ஞானசாரா அவர்கள் இன்று அரச ஊடகங்களை நன்றாகவே பயன்படுத்தியும் வருகின்றார்.
ஆகவே பொதுபல சேனாவுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணிவரும் ஜனாதிபதி மைத்ரி அவர்களை யாரும் கண்டுகொண்டதாக தெறியவில்லை.
இன்னொரு இனவாதியான ஐ.தே.கட்சியின் அமைச்சரான சம்பிக்க ரணவக்க அவர்கள் இன்று எங்கே இருக்கிறார். அவர் எழுதி வெளியிட்ட ஜிஹாத் என்ற புத்தகத்தை வாசித்து பார்த்தாலே ஒரு உண்மை முஸ்லிம் அவர் இருக்கும் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கமாட்டான் என்பதே உண்மையாகும்.
ஆகவே இனவாதிகள் யார்? இவர்களை இயக்குவது யார்? என்பதை முஸ்லிம் மக்கள் தெளிவாக இனம் கண்டு இவர்களுக்கு தக்கபாடம் புகட்டாதவரை நமது சமூகத்துக்கு இவர்களினால் நாசம் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.