பொய்யான தகவல்களை பரப்புகிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னஇலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் ஒரு முறை பொதுமக்களையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் பதவியில் இருக்குமாறு தனது தந்தை மகிந்த ராஜபக்ச கூறவில்லை எனவும் அரசாங்கத்தில் மாற்றம் தேவை என்பதை மக்கள் தெளிவாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரை பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கூறியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால், பிரதமர் பதவியில் மாற்றம் அவசியமில்லை என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதாகவும் ராஜித கூறியிருந்தார்.
பொய்யான தகவல்களை பரப்புகிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன பொய்யான தகவல்களை பரப்புகிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன Reviewed by NEWS on February 16, 2018 Rating: 5