Mar 23, 2018

தொட்டிலாட்டும் சோபித தேரர்!சமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும்,  ஓமல்பே சோபித்த தேரர் முஸ்லிம்கள் விடயத்தில் மோசமான  கருத்தை தெறிவித்திருந்தார். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம். 

நாட்டில் சட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனியார் சட்டம் கூடாது என்பதும்  அவரது ஒட்டு மொத்த கருத்துக்களின் சாராம்சம் . 

 இஸ்லாமியர்களுக்கு என்ற தனி சட்டம் சாதாரணமாக கிடைத்த சட்டம் அல்ல. இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக இலங்கை அரசு புதுசாக வழங்கியதும் அல்ல. 1765 ஆம் ஆண்டு டச்சு கவர்னர் வில்லியம் பெலக்கினால் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் வழங்கப்பட்டது. இது ஒல்லாந்தர் காலம் கடந்து ஆங்கியேலயர் கடந்து 1954 ல் முழுமையாக நடைமுறைக்கு வந்து இன்று வரை நிலைத்து நிற்கிறது. 

முஸ்லிம் தனியார் சட்டம் என்பது வெறுமே சட்ட விடயத்தில் மட்டும் கைவைப்பதல்ல முஸ்லிம்களின் மத சுதந்திரத்தில் கைவைப்பதாகும். மத சுதந்திரம் உள்ள இந்த நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு அமைய முஸ்லிம்கள் வாழக்கூடாது என்பது இவர்கள் என்னமாக இருக்கிறது. இஸ்லாமிய தனியார் சட்டம் ஒன்றும் நாட்டை விட்டு பிரிந்து நிற்கவில்லை. 
அதுவும் இலங்கை அரசியல் சட்டத்தின் கீழே நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆகவே இஸ்லாமிய தனியார் சட்டத்தில் கைவைப்பது என்பது இஸ்லாமியர் மத சுதந்திரத்தில் கைவைப்பதாகும். 

இஸ்லாமிய தனியார் சட்டத்தை துடைத்து எரிந்து விட்டு பௌத்த சட்டத்தையா நாட்டில் கொண்டு வரப்போகிறீர்கள் என்றால் இவர்கள் தொங்கி கொண்டு இருப்பது மேற்கத்தேயே சட்டங்களையும் ஆய்வையும்தான். ஆகவே இவர்களுக்கு சொந்த நாட்டு மக்களை விட அன்னிய நாட்டுக்கு கூஜா தூக்குவதுதான் பிடித்திருக்கிறது போல. 

ஒரு நாட்டில் ஒவ்வொரு மதத்தோருக்கும் ஒவ்வொரு சட்டம் இருப்பது அந்த நாட்டின் சிறப்புதானே தவிர அவமான சின்னம் அல்ல. அப்படி நினைத்தால் கண்டி சிங்களவர்களுக்கு என்று உள்ள தனியார் சட்டமும் ,யாழ்ப்பான தமிழர்களுக்கு என்றும் உள்ள தனியார் சட்டமும் அவமான சின்னமாக இவர்கள் நினைத்திருக்க வேண்டும். அதற்கு எதிராக போராடி இருக்க வேண்டும்.

ஆனால் இவர்களுக்கு இஸ்லாமிய சட்டம் மாத்திரம் கண்ணுக்கு தைப்பது ஏன்? ஒரு நட்டில் பல சமூகம்,பல கலாச்சாரம் இருப்பதும் பல மொழிகள் , பல மதங்கள்,  இருப்பதும் அந்த நாட்டின் சிறப்பில் ஒன்று. நாட்டில் ஒரே மதம்தான் ஒரே கலாச்சாரம்தான்   இருக்க  வேண்டும் என்று இவர்கள் நினைத்தால் இந்தியாவில் இருந்து இவர்களுக்கு இறக்குமதி செய்யப்படும் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கையை விதைக்கும் சிவசேனாக்கள் மற்றும் இந்திய RSS களின் கொள்கைக்கு அமைய இலங்கையிலும் ஒரே மதமே இருக்க வேண்டும். ஒன்று அவர்கள் கூறும் இந்து மதம் அல்லது இவர்கள் கூறும் பௌத்த மதம். யார் யாரை துறத்தினாலும் கடைசியில் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாக வேண்டி வரும். 

அரசியல் சட்டங்கள் எல்லாமே மக்கள் தமது தனித்துவத்தை காத்து அமைதியாக வாழவே. அதை நிலை நட்ட உதவுவதற்குத்தான் அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எனவேதான் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டின் சட்டத்தின் கீழ் தனித்துவமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் அரசியல் சட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை ஏற்றது அந்த சட்டத்தை அரசாங்கம் பாதுகாத்தது இப்போது அந்த சட்டத்தை அரசாங்கம் பாதுகாக்காமல் விட்டது சட்டமும் துடைத்தெறியப் பட உள்ளது.

இவர்களின் விமர்சனங்கள் என்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் இறையான்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரானது ஆனாலும் அதற்காக இவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். காரணம் அவர்கள் துறவிகள் என்பதற்கான தனியான சட்டம். 

வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு போகும் முஸ்லிம்கள் ஹெல்மட் போடாமல் சென்றாலும் பொலிஸார் பிடிப்பதில்லை என்ற கருத்து மதவெறியின் வெளிப்பாடே .இது  ஒவ்வொரு வாரமும் நடக்கிறது ஆனால் பௌத்தர்களுக்கு வருடத்தில் அவர்களது பெரு நாள் தினங்களில் மட்டுமே வழங்குகப்படுகிறது என்பது இவர்களின் மத வெறி பிடித்த குற்றச் சாட்டு. மதங்களுக்கு மத்தியில் சமாதானத்தை விதைக்க வேண்டியவர்கள் பொறாமை கொண்டு பௌத்த மதத்துக்கே இழிவை ஏற்படுத்துகின்றனர் . 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வந்தாலும் தொழுகை நடக்கும் நேரம் குறைந்தது இரண்டு மணி நேரம் . வருடத்தில் 50 கிழமை என்று வைத்துக் கொண்டாலும் 100 மணி நேரம் . கிட்டத்தட்ட நான்கு முழு நாட்கள். மேலதிகமாக இரு பெருநாட்கள் சேர்த்து முழுதாக 6 நாட்கள் . ஆனால் பௌத்தர்கள் வருடத்திற்கு எத்தனை பெரு நாட்கள் கொண்டாடுகிறீர்கள் என்று கணக்கிட்டால் யார் அதிக சலுகை அனுபவிப்பது என்று புரிய வரும். 

அதிலும் அவரே கூறுகிறார் இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரில் மட்டும் இந்த சலுகை கொடுக்கப்படுவதாக. ஆனால் சிங்கள மக்களோ நாட்டின் எந்த புரத்திலும் இந்த சலுகையை அனுபவிக்கிறார்களே. எனவே இந்த நடைமுறையை கலைத்து விட்டால் யாருக்கு நஷ்ட்டம்? 

அடுத்து பள்ளிக்கு வரும் அந்த இரு மணி நேரத்தில் அந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ளோர்தான் பெரும்பாலும் வருவார்கள். அவர்களுக்கு நடையிலு்ம் வர முடியும். இந்த சலுகையை இல்லாமல் செய்தால் தங்களது  பெருநாட்களில் ஊர் முழுக்க  பயனம் செய்யும்  பெரும்பான்மையினருக்கு நஷ்ட்டமா? எங்களுக்கா? 

பௌத்த மத குருக்களுக்கு என்று பஸ்ஸின் முன் பகுதியில் இருப்பிடம் ஒருக்கப்படுகிறது . கற்பினி கூட அந்த சீட்டில் இருந்தாலும் எழுந்துதான் ஆக வேண்டும் என்ற சட்டம் அதை முஸ்லிம்கள் மத குருக்கள் பயன்படுத்துவதில்லை இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமிய மதகுருவாயினும் சாதாரண மனிதனாக இருந்தாலும் எல்லாரும் சமமே. அவர்கள் மார்க்க விடயத்தில் அறிவு கொண்டிருப்பதால் மார்க்க விடயத்தில் மட்டும் முற்படுத்தப்படுவார்களே தவிர பொது வெளியில் அனைவரும் ஒன்றுதான்.ஆனாலும் பௌத்த துரவிகளுக்கு என்று  வழங்கப்பட்டதை சமனற்ற   சட்டம் என்ற பெயரில் நாம் எதிர்க்கவில்லை. இந்த சட்டத்தையும் தூக்கி விட்டால் யாருக்கு நாஷ்ட்டம்? 

நீதி மன்றத்தில் பௌத்த துறவிகளுக்கே வழங்கப்படாத சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்று ஆதங்கப்படுகிறார் அவதானிக்க :-அப்படியன்றால் பௌத்த துறவிகள் சட்ட விடயத்தில் சலுகை வழங்கப்படுவதை யும் பிக்குகளை உயர்த்தியும் மற்றவர்கள் சட்டவிடயத்தில் பிக்குகளுக்கு கீழ் இருக்கவும் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.

எந்த முஸ்லிம் பள்ளிகளையும் அரசாங்கம் கவனிக்கவுமில்லை, கட்டிக் கொடுக்கவுமில்லை அதற்கு ஊதியமும் வழங்கவில்லை.மாறாக இருப்பதை உடைக்கவே முயற்சிக்கிறது. பௌத்த விகாரைகள் மற்றும் அதன் மத குருக்களுக்கான அரசாங்க சலுகைகள் என்ன என்ற விடயம் உங்களுக்கே தெறியும்.நாங்கள் அதற்காக பொறாமைப்படவுமில்லை. 

முஸ்லிம்களுக்கான திருமன சட்டம் வக்பு சட்டம் என்பது திருமனம் வாழ்விடம் சொத்து பிரச்சினை தொடர்பானது. அந்த உரிமையிலும் உங்களுக்கு பொறாமை என்றால் உங்களைப்போல் எங்கள் முஸ்லிம் சமூகமும் சீதனத்தால் கண்ணீர் விடுவது மீண்டும் அதிகரிக்கும். நாட்பது வயது வரை கல்யானம் இன்றி குழந்தை இன்றி மலடாகவே சாக வேண்டி வரும். 

இஸ்லாம் திருமனத்தை வரவேற்கிறது . கற்பைக்காக்கவும் கண்டவனிடம் செல்லாமல் இருக்கவும். பருவ வயதை அடைந்தால் திருமனம் செய்து வைக்கவும் சொல்கிறது.  இது  அனைத்து மதத்தவரிடமும் முன்னர் இருந்த வழக்கம்தாம். எனவே உங்கள் முன்னோரையே நீங்கள் குறை கூறி இழிவு படுத்த முயல்கிறீர்கள் என்பது உங்கள் இனத்துக்கே தெறியவில்லை என்பதுதாம் நிதர்சனம். 

14 வயதில் ஒரு பெண் இஸ்லாமியராக மாரி திருமணம் செய்து கொண்டாள் என்றால் இயற்கை சொல்ல வரும் செய்தி திருமனத்திற்கும் ஆசைக்கும் வயதில்லை. பருவ வயதை அடைந்தாள் அவர் குடும்ப வாழ்க்கைக்கு தயார் ஆகி விடுகிறாள் என்பதைத்தான். அதை இஸ்லாம் புறிந்து கொண்டு சட்டம் இயற்றி உள்ளது. நீங்களோ மேற்கத்தேயே ஆய்வை காட்டி மனித உணர்வில் விளையாடுகிறீர்கள். 

முடிந்தால் இவர் சொல்லட்டும் 14 வயதில் ஓடிப்போய் திருமனம் செய்த நபர்கள் அவர்கள் இனத்தில் இல்லை என்று? சட்ட ரீதியாக திருமனம் செய்யாமல் இருந்தாலும் ஓடிய நிகழ்வும் ஒன்றாய் வாழும் நிகழ்வும் நடக்காமல் இல்லை. அப்படி இருந்தும் எதற்காக முஸ்லிம்கள் மீது இந்த பழி சுமத்தல். பெண்கள் நலம் நாடியா? இல்லை. அந்த பெண்ணின் உணர்வுக்கு இஸ்லாம் வழி கொடுத்ததும்.    இஸ்லாத்துக்கு வந்து திருமனம் செய்ததும் அதற்கு இஸ்லாமிய திருமன சட்டம் அணுமதித்ததும்தான் காரணம். ஆகவே இது நலம் நாடி அல்ல. மததுவேசம் நாடி.

முஸ்லிம்களுக்கு என்று தனியார் பாடசாலை இருக்கும் போதே பர்தாவை கழட்டு தொப்பியை கழட்டு என்று நாட்டில் மத வெறியை கக்குவோராக இருக்கும் போது முஸ்லிம்கள் அனைத்து மத பாடசாலையில் சேர்ந்து விட்டால் இஸ்லாம் என்ற பாடத்தையே தூக்க சொல்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே முஸ்லிம்கள் அவர்களுக்கு என்று தனியான கலாச்சாரத்தில் இருக்க கூடாது என்பதுதான் உங்கள் என்னமாகும். இந்த என்னம் நம் நாட்டு சட்டத்திற்கும் எதிரானது அமைதிக்கும் எதிரானது பௌத்த மதத்திற்கும் எதிரானது. ஆனாலும் நீங்கள் துறவிகள்- உங்களுக்கான சிறப்பான சட்டம் உங்களை காக்கும்.

ஹலால் வரியினால் தங்களால் கண்ட கண்ட கெமிக்கள்களையும் சாப்பிட தகுதில்லாத பொருட்களையும் சுவைக்காக அனுமதிக்கப்படும் உடலை கெடுக்கும் சுவையூட்டிகளையும் சேர்க்க முடியவில்லை என்ற காரணத்தால் கம்பனிகள் கிழப்பிட ஆம் இதில் நமக்கு பாதிப்புத்தான் என்று மடமைத்தனமாக கிளம்பிய உங்களை நாம் என்ன சொல்ல. நீங்கள் இன்றே இஸ்லாம் ஹராம் என்று சொன்ன பொருளில் மனிதனுக்கு பாதிப்பான எதுவும் இல்லை என்று நிரூபித்தால் இஸ்லாமிய சட்டம் அடுத்த நொடியே ஆம் அது ஹலால் என்று அனுமதிக்கும் . நாட்டில் உள்ள உணவுக்கட்டுப்பாட்டை விட மிகவும் தரம் வாய்ந்தது ஹலால் முறை என்று அமேரிக்காவில் கூட ஹலால் நடைமுறைக்கு வந்து விட்டது. அவர்களை பின்பற்றும் உங்களுக்குத்தான் இன்னும் விளங்காமல் போய்விட்டது. இது யார் தவறு? 

முஸ்லிம் மாணவர் சீருடைக்காக 1500 வழங்கப்படுகிறது என்றால் அவர்களுக்கு அரசாங்க கொடுக்கும் உரிமையும் சலுகையும் உங்கள் கண்ணை உருத்துவது ஏன்? அதில் அநீதி இழைக்கப்படுகிறது என்று கருதினால் நீங்களும் மேலதிகமாக முஸ்லிம்கள் போல மேலதிக சீறுடை அனிய உள்ளோம் என்று காரணம் காட்டி மேலதிக 750/- பெற்றுக் கொள்லலாம். அதை விட்டும் கொடுக்கப்பட்ட சலுகையை பறிக்க சொல்வதுதான் பௌத்த மதம் போதிப்பதா? பல்கலைக்கழகத்தின் நுளைவு ,ஆசிரியர் நியமன்ம் , ஏனைய அரசு சார் நிருவங்களில் மட்டும் சிங்களவர்கள் அதிகாமாகவும் முஸ்லிம்கள் இருக்கும் இன வீதத்துக்கு குறைவாகவும் இருப்பது ஏன்? இனவாரியான நுழைவை விட்டும் திறமை வாரியான சட்டம் வந்தால் முஸ்லிம்களும் இன்னும் சிறிது அதிகமாக நுழைவார்கள். இனவாரியாக மேலதிக சலுகை வழங்க முடியுமாக இருந்தால் கலாச்சார ரீதியாக ஏன் மேலதிக சலுகை வழங்க முடியாது. 

இதற்கு முதல் அபாயா பிரச்சினை , ஹலால் பிரச்சினை , தனியார் சட்டப்பிரச்சினையல்லாம் இலங்கை வாழ் மக்களுக்கு மத்தியில் வரவில்லை. காரணம் அவர் அவர் கலாச்சாரத்தை அவர் அவர் மதித்து வாழ்ந்தார்கள். அது அவர்களுக்கான தனிச்சட்டம் என்று ஒற்றுமையோடு வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்றோ பெரும்பான்மையினர் மத்தியில் விசம் விதைக்கப்பட்டு மதவெறியர்களாக மாற்றப்பட்டு நாட்டின் அமைதியை கெடுத்து விட்டனர் இதற்கு காரணம் யார்? சிங்கள மக்களுக்கு இந்த வெறியை தூண்டியது யார் ? என்பது மறைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. 
இதற்கல்லாம் காரணம் முஸ்லிம்கள் மீதுள்ள பொறாமைக் குணமே தவிர்ந்து வேறு என்ன? அமைதியை போதித்தவர்கள் இன்று பொறாமையால் பொய்யை போதித்தமைதானே இதற்கு காரணம். முஸ்லிம்கள் யாருக்கும் அனியாயம் செய்யாது தன் மதம் தன் வழி என்று அமைதியாக வாழ்வதன் பொறாமையால் எழுப்பப்படும் ஓலம் இந்தியாவில் இருந்தும் சீனா மியன்மாரில் இருந்து வருவிக்கப்பட்டதையும் பரப்ப பட்டதையும் யாரும் அறியாமல் இல்லை. இதையல்லாம் இந்த சட்டம் பார்த்துக் கொண்டு இருக்கும்  காரணம் உங்களுக்கான தனிச்சட்டம். 

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல மறைமுகமாக மத வெறியை விதைத்து விட்டு மனிதனாக வாழ்ந்தோரை மிருகமாக மாற்றி விட்டு மீடியாவின் முன்னே உத்தமர்கள் போல சிலர் நடித்து அகிம்சை வழி பேசி விட்டால் கிள்ளிய தடம் மறைந்து விடுமா ஒரு நாள் மாட்டாமல் போய்விடுமா? மாட்டினாலும் சட்டம் பார்த்துக் கொண்டு இருக்கும்.அது உங்களுக்கான தனிச்சட்டம்.

S.sifraj (madinah)

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network