நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொண்டால் புதிய அரசாங்கம்- மஹிந்த

NEWS
0 minute read

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடையச் செய்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைக்க ஒதுங்கியிருந்து ஆதரவை வழங்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதில் கூட்டு எதிர்க் கட்சி வெற்றி பெற்றால் அரசாங்கம் கலைந்துவிடும் எனவும், 4 ஆம் திகதிக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்க வேண்டி ஏற்படும் எனவும் அரசியல் மட்ட தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
To Top