முல்லை நலன்புரி சங்கங்களுக்கு ஒலிபெருக்கி கூடாரங்கள், எம்.பி.காதர் மஸ்தான் தனது நிதி ஒதுக்கீடு மூலம் வழங்கி வைத்தார்.

தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் முல்லைத்தீவு வெலிஓயா சப்புமல்தென்ன, மற்றும் மாயாவெவ மரண நலன்புரிச் சங்கங்களுக்கு 125000 ரூபா பெறுமதியான கூடாரங்களையும். கல்யாணிபுரம் 4வது யுனிட் மக்களின் தேவைக்காக ஒலிபெருக்கியையும் இன்று வழங்கி வைத்தார். 


தமது நீண்டகால தேவையாக இருந்த மேற்படி பொருட்களை தமக்கு வழங்குமாறு இப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தமது நிதி ஒதுக்கீடு மூலம் மேற்படி பொருட்களை பெற்றுக் கொடுத்தார்.

இந்நிகழ்வில் வெலிஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.வி.வெற்றவெவயையும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Rija
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...