தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி

தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்த்தில் உள்ள குஜா ஓமரி மாவட்டத்தில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இம்மாவட்டத்தில் உள்ள அரசு வளாகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பாதுகாப்பு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்ட கவர்னர், உளவுத்துறை இயக்குநர் மற்றும் துணை போலீஸ் அதிகாரி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். 15 பாதுகாப்பு படைவீரர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகள் அரசு படைகளின் தாக்குதலிருந்து தப்பிக்க சுரங்கங்கள் அமைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடைபெற்ற தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் தாக்கப்பட்டாலும் பின்னர் எதிர்தாக்குதல் நடத்தினர்.
தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி Reviewed by NEWS on April 12, 2018 Rating: 5