திகாரியில் முஸ்லிம் வர்த்தகரின் நிப்போன் செரமிக் கடை தீ!


 இன்று (01.04.2018) அதிகாலை 12 :30 மணியளவில் திகாரி (கொழும்பு-கண்டி வீதி) மல்வத்தயில் உள்ள நிப்போன் செரமிக் எனும் கடையொன்றில் பாரிய தீ ஏற்பட்டதில் அக்கடையின் பொருட்கள் முற்றுமுழுதாக எரிந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறித்த கடையானது கல்எலிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு (ஹுசைன்)  சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு 12:30 மணியளவில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

 தீப்பிடித்தற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீயணைப்பு படையினர் தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் கடை முற்றுமுழுதாக எரிந்து விட்டாதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை சம்பவ இடத்தில் லைட்டர் மற்றும் மொபைல் போன் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. திகாரியில் முஸ்லிம் வர்த்தகரின் நிப்போன் செரமிக் கடை தீ! திகாரியில் முஸ்லிம் வர்த்தகரின் நிப்போன் செரமிக் கடை தீ! Reviewed by NEWS on April 01, 2018 Rating: 5