ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து கபீர் ஹஷீம் இராஜினாமா!
ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசீம் பதவி விலகுவதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

அதேவேளை மகிந்த அணியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேற்றுத் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் வென்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...