பிரதமர் தொடர்பில் றிசாட் பதியூதீனின் இறுதி முடிவு என்ன?கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து இன்றைய தினம் ரிசாட் பதியூதீன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர்.

நாளைய தினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரையில், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சி தெரிவித்துள்து.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள்.
பிரதமர் தொடர்பில் றிசாட் பதியூதீனின் இறுதி முடிவு என்ன? பிரதமர் தொடர்பில் றிசாட் பதியூதீனின் இறுதி முடிவு என்ன? Reviewed by NEWS on April 03, 2018 Rating: 5