என்னை சந்திக்க வரும் 16 பேரும் புதிய விருந்தினர் அல்ல!

NEWS
0 minute read
0
Image result for mahinda

தன்னைச் சந்திக்க வருகை தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்த 16 பேரும் தனக்கு புதிய அதிதிகள் அல்லவெனவும், தனது ஆட்சியில் இருந்த அமைச்சர்களேயாவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த 16 பேருடனும் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை நிச்சயம் வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் தொடர்பிலும், முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22) குறிப்பிட்டுள்ளார்.
To Top