ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் - 34 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பராக் மாகணத்துக்குள் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று இரவு துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பாலபுலுக் மாவட்டத்தில் இருந்த சோதனைச் சாவடிகள், மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்த கொடூர தாக்குதலில் 23 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பராக் நகரில் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள் 11 போலீசாரை கொன்றனர். மேலும் அங்கிருந்த அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே இரவில் பாரக் மாகாணத்தில் 34 போலீசார் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share The News

Post A Comment: