சூரியன் வானொலியில் 5 முஸ்லிம் அறிவிப்பாளர்கள்; 20 வருடங்களாக இப்தார்-சஹர் நேரலை!1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூரியன் வானொலி பல முஸ்லிம் அறிவிப்பாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தது, அந்த வரிசையில் முஸ்லிம் இளைஞர்களின் திறமைகளுக்கு சான்று பகர்ந்த சூரியன் எப்.எப் அன்றிலிருந்து இன்றுவரை றமழான் காலத்தில் இ்பதார் மற்றும் சஹர் நேரலைகளை சிறந்த முறையில் செய்து வருகிறது.

மார்க்க சொற்பொழிவுகள், இஸ்லாமிய நிகழ்வு நேரலை என பல நிகழ்ச்சிகளை செய்து வருவதோடு, முஸ்லிம் பிரதேசங்களில் பல உதவித்திட்டங்களையும் செய்து வருகிறது. எந்தவொரு தனியார் வானொலியில் இல்லாதவாறு 5 முஸ்லிம் அறிவிப்பாளர்களை கொண்டு இயங்கி வருகிறது அதில் சிலருக்கு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

நிந்தவூரைச் சேர்ந்த அஸ்ரப் - உதவி பொது முகாமையாளர் - விரிவாக்கல்
மூதுாரைச் சேர்ந்த றிம்சாட் - உதவி முகாமையாளர் - நிகழ்ச்சிப் பிரிவு
சம்மாந்துறை லரீப்
அநுராதபுரம் றிம்சான்
குருநாகல் கியாஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர், பிரதான லோசன் அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுப்பதோடு, றமழான் நிகழ்ச்சிகளை திறம்பட செய்ய வழிசமைத்துக் கொடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடியது.சூரியன் வானொலியில் 5 முஸ்லிம் அறிவிப்பாளர்கள்; 20 வருடங்களாக இப்தார்-சஹர் நேரலை! சூரியன் வானொலியில் 5 முஸ்லிம் அறிவிப்பாளர்கள்; 20 வருடங்களாக இப்தார்-சஹர் நேரலை! Reviewed by NEWS on May 26, 2018 Rating: 5