டொக்டர் ஆபியா சித்திக்கீ அமெரிக்கச் சிறையில் மரணம்?


டொக்டர் ஆபியா சித்தீக்கி அமெரிக்கச் சிறையில் உயிரிழந்துள்ளதாக ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கின்றது.
இதுகுறித்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத போதிலும் டொக்டர் ஆபியா சித்திக்கீ குறித்த தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இதனை ஒரு வாய்ப்பாக்கிக் கொண்டுள்ளோம்.
1972 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறந்த ஆபியா சித்தீக்கி திறமையான ஒரு பெண்.
சராசரி பாகிஸ்தானிய பெண் போல அடுப்படிக்குள் நாண் ரொட்டிக்குள் தனது திறமைகளை மறைத்து விடாமல் சமூகத்துக்காக உம்மத்துக்காக தனது மேற்படிப்பை 1990 இல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் தொடர்ந்த அவர் நரம்பியல்  துறையில் அசாதாரண திறமையை காட்டினார் .
அவர் தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க
பிராண்டைஸ் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் கலாநிதி
படிப்பை தொடர்ந்தார்.
தனியே படிப்பில் மாத்திரம் அக்கறையை காட்டாமல் பல சமூக
அமைப்புகளோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதுடன் பல
சமூக சேவைகளிலும் ஈடு பட்டு வந்தார் .
அவரால ஆரம்பிக்கப்பட்ட பல சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
மூன்று பிள்ளைகளின் தாயான அவர் தனது நரம்பியல் சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய போது அந்த பல்கலைகழகம் மூக்கில் விரலை வைத்தது.
முஸ்லீமாக இருந்ததாலும். அதிலும் மார்க்கத்தை  தினமும் நடைமுறைப்படுத்தும் முஸ்லீமாக இருந்ததாலும் அவரது சில
கண்டுபிடிப்புகள் அமெரிக்காவை விட்டு வெளியே சென்று முஸ்லீம்
உலகில் அதிலும் போராளிகளின் கையில் சிக்கிவிடும் என்ற அச்சத்தில் அமெரிக்காவின் எப் பீ ஐ (FBI) அவரை அவதானிக்க தொடங்கியது .
நரம்புகளை செயல் இழக்க வைக்கும் ஒரு இரசாயனம் தொடர்பாக அவர் கண்டுபிடித்தமை அவர் மீதான கவனத்தை ஈர்க்க வைத்தது
2001 ஆம் ஆண்டில் தனது பீ எச் டீ  (PhD)யை முடித்து கொண்ட ஆபியா சித்திக்கீக்கு பல்டிமோரின் உள்ள சினாய் மருத்துவமனையில்
வேலை கிடைத்தது .
அத்துடன் ஜோன் ஹோப்கிண்ட்ஸ் பல்கலைகழகத்தில்
விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே விடுமுறையொன்றின் போது 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு தனது மூன்று சிறிய குழந்தைகளுடன் பயணமானார்.
அந்த பயணம் தான் அவரது வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த
உள்ளது என்று அவருக்கு அன்று தெரிந்திருக்கவில்லை .
பாகிஸ்தான் சென்ற அவர் ஒரு வருடத்துக்குள் அதாவது 2003 இல்
அவரது மூன்று குழந்தைகளுடன் திடீரென காணமல் போனார்.
காணமல் போனார் என்பதை விட கடத்தப்பட்டார் என்பதே பொருத்தமான
சொல்.
பாகிஸ்தானிய அரசாங்கம் ஆபியா காணாமல் போனதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி வந்த போதும் அவரது கைதுக்கும் கடத்தப்பட்டமைக்கும் அமெரிக்காவின் முந்தானையை பற்றிப்பிடித்துக் கொண்டிருந்த அப்போதைய பாகிஸ்தானி அரசே உதவி செய்தது என்று
ஆதாரத்துடன் கூறப்படுகிறது.
அவரது கணவரின் மாமனாரான காலித் ஷேய்க் முஹம்மது கைது செய்யப்பட்டு அமெரிக்க தீவிரவாதிகளால் 183 தடவைகள் waterboarding சித்தரவதை (எனது முந்தைய பதிவில் மேலதிக தகவல் உண்டு) செய்ததை அடுத்து சித்தீக்கி என்ற பெயரை வலுக்கட்டாயமாக உச்சரிக்க வைக்கப்பட்டார்
அடுத்து நரகசித்திரவதைகளின் பின்னர் ஆபியாவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக காலித் ஒப்புகொள்ள வைக்கப்பட்டார்
அதன் பின்னர் அவரை தேடும் பணி ஆரம்பமானது என்று அமெரிக்கா
கதை விடுகிறது.
அந்த அமெரிக்காவின் கதையில் 2004 ஆம் ஆண்டின் மே மாதம் அறிவிக்கப்பட்ட மிகவும் தேடப்படும் பயங்கரவாதியாக ஆபியா சித்திக்கீ
இருந்தார்.
அதன் பின்னர் ஜூலை மாதம் 2008 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் வைத்து அவர் அமெரிக்க படைகளால் கடத்தப்பட்டு பக்ரம் மற்றும் குவாண்டனாமோ சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்.
இந்த கடத்தலின்போது அவரின் ஒரு குழந்தையையும் அமெரிக்க தீவிரவாதிகள் அநியாயமாக கொலை செய்தனர்.
ஏனைய பிள்ளைகள் பாக்கிஸ்தான் conventional children’s prison ல் தள்ளப்பட்டனர்.
இவர்கள் செய்த குற்றம் என்ன?
கைது செய்யப்பட்ட வேளை அவர் அமெரிக்க படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தினாராம் .அவர் கைது செய்யப்பட்டாராம் . இதுதான்
அமெரிக்க கதை .
ஆனால் தாம் எவ்வாறு கடத்தப்பட்டோம் என்பதை அவரது மகன் இவ்வாறு விபரிக்கிறார்
“Her son Ahmed described that his mother was driving a vehicle, taking the family from Karachi to Islamabad, when it was overtaken by several vehicles, and he and his mother were taken into custody. He described the bloody body of his baby brother being left on the side of the road. He said he had been too afraid to ask his interrogators who they were, but that they included both Pakistanis and Americans. He described beatings when he was in US custody. Eventually, he said, he was sent to a conventional children’s prison in Pakistan.”
நடந்தது எல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதை .  அமெரிக்காவும், சியோனிசமும் நமக்கெல்லாம் ஒரு பொய் சொல்லும் போது அந்த பொய்யை நிரூபிக்க பல
பொய்களை சொல்லுவார்கள் .
2002 இல் பாகிஸ்தான் திரும்பிய அவரோடு திரும்பியது எப் பீ ஐயும்
தான்.
அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்த அது பாகிஸ்தானிய அரசின் உதவியுடன் அவரை கடத்தியது.
உலகில் நரம்பியல் -விஞ்ஞான துறையில் அதுவும் ஆபியா சித்தீக்கி செய்த விசேட துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம்கள் மாத்திரமே உள்ளனர்.
அவர் பாகிஸ்தானில் ஒரு முக்கிய புள்ளியாக ,பாகிஸ்தானின்
பெருமையாக அப்போது அவர் கருதப்பட்டார் .
அவர் காணாமல் போய் விட்டார் என்ற செய்திகள் பாகிஸ்தானில் வெளியாகிய போது பாகிஸ்தான் மக்கள் அவர் தொடர்பான தகவலை அந்நாட்டு அரசாங்கத்திடம் கேட்டனர், ஆபியா குறித்த செய்திகள் ஊடகங்களில் எழுதப்பட்டன. ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டன . மக்களின்
நெருக்குதல்கள் பாகிஸ்தான் அரசை அமெரிக்காவிடம் முறையிட செய்திருக்கக் வேண்டும்.
அமெரிக்கவும் நாடகம் ஆட முடிவு எடுத்தது .அமெரிக்காவின் கைதியாக இருக்கும் போதே அவரை தேடப்படும் பயங்கரவாதியாக சித்திரித்தது  அமெரிக்கா.  2005 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் தாலிபானுக்கு எதிரான
யுத்தத்திலும் அமெரிக்கா கூறி வரும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்திலும் ‘  அமெரிக்காவோடு கூட்டு சேர வேண்டாம் என்று ஆயிபா
சித்திக்கீ பகிரங்கமாக பாகிஸ்தான் அரசை கேட்டு ஈமெயில் அனுப்பியதாகவும் யூதர்களுடனும்,கிருஸ்தவர்களுடனும் கூட்டு சேர வேண்டாம் என்ற குர்ஆனிய வசனத்தையும் மேற்கோள் காட்டியதாகவும்
செய்திகளை தயாரித்து வெளியிட்ட அமெரிக்கா, அவரை
இன்னமும் தேடப்படும் பயங்கர வாதியாக சித்தரித்தது.
தனது காவலில் உள்ள ஒருவரை தேடப்படும் பயங்கர வாதியாக
காட்டி ஆபியா சித்தீக்கி ஒரு பயங்கர வாதி என்று உலகுக்கு ,பாகிஸ்தான் மக்களுக்கு வருணிக்க வைத்தது அமெரிக்கா.
ஆயிபா சித்தீக்கியையும் அவரது மூன்று குழந்தைகளையும் கடத்தியதில் தனக்கு தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக மனம் குறுகுறுத்த பாகிஸ்தானிய
சிந்து மாகாண பொலிஸ் அதிகாரி ஒருவர் பின்னர் ஒருகட்டத்தில்
கூறியுள்ளார்.
முதலில் பாகிஸ்தானிய உளவு பிரிவால் அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்று அந்த அதிகாரி கூறியதுடன் அமெரிக்க -பாகிஸ்தானிய அதிகாரிகளே அவரை கைது செய்து வைத்துக்கொண்டு
காணவில்லை என்றும் தேடப்படுகிறார் என்றும் கதை விட்டது என்றும் கராச்சியில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு இது தெரியும் என்றும்
கூறியுள்ளார் .
அவர் தீவிர வாதியும் இல்லை ஒன்றும் இல்லை அவர் கடத்தப்பட்டு
சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என அவரது குடும்பம் கூறி பாகிஸ்தானிய அரசிடமோ அமெரிக்கவிடமோ நியாயம் கிடைக்காது என்று களைத்து
போயுள்ளனர்.
ஆப்கானிதானில் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆபியா கைது செய்யப்பட்டதாக அமெரிக்கா கதை விட்டது. கைது செய்யப்பட்ட போது
அவரிடம் இருந்த யூ .எஸ் பீ drive இல் இரசாயன ஆயுதங்கள் ,அமெரிக்க
ஆளில்லாத விமானங்களை வீழ்த்தும் தகவல்கள் இருந்ததாக ஆப்கானிஸ்தானை வைத்து கட்டிய கதையை மெய்யாக்கியது.
பின்னர் அவர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார் .
இப்போது பயங்கரவாதி என்று பட்டம் கட்டப்பட்டு பகிரங்கமாக நியூயோர்க்
நகர நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டார் .
தொடர்ச்சியான சித்திர வதைகளால் அவரது ஞாபக சக்தியை இழந்தார் . அல்லது அவரிடம் இருந்த அரிய அறிவை மறக்கடிக்க ஞாபக சக்தியை இழக்க வைக்கப்பட்டார்
பல தடைவைகள் தான் குற்றவாளி இல்லை என்று நீதி மன்றத்துக்குள்
கத்தியதால் நீதி மன்றத்தை அவமதிப்பதாக தொடர்ச்சியாக அவருக்கு எதிரான வழக்குகள் பிற்போடப்பட்டன.
தொடர்ச்சியான சித்திரவதையால் அவரின் உருவம் மாறியது .அழகிய
தோற்றத்தில் இருந்த அவர் பைத்தியம் பிடித்தவர் போல ஆக்கப்பட்டார்.
பல தடைவை தனக்கு நீதி தேவை என்று நீதிமன்றத்துக்குள் கத்தியதால் மனநிலை  பாதிக்கப்பட்டு விட்டார் என்ற பட்டம் கட்டப்பட்டது .
சரி மன நிலை பாதிக்கப்பட்டு விட்டார்தானே இனிமேலாவது விடுவியுங்கள் என்று பல மனிதாபிமான ,இஸ்லாமிய அமைப்புகளால் கேட்கப்பட்ட போது
திடீரென கதை மீண்டும் மாற்றப்பட்டது .
அவர் நீதி மன்றத்துக்கு முன்னால் விசாரணைக்கு நிற்க மன ரீதியாக
பாதிக்கப்படாதவர் என கூறி அவருக்கு 12 வருட சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது .
இதற்கிடையில் சிறையில் அவருக்கு நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் கொடூரங்கள் கதறி அழவைத்துவிடும்.
நிர்வாணமாக சித்திரவதை 1000க்கு மேற்பட்ட தடவைகள் கற்பழிப்பு
திறந்த வெட்டவெளியில் பலர் முன்னிலையில் மலசலம் கழிக்க வைத்தல்
சாப்பிடும் உணவுத்தட்டிலேயே ஏனையோரை சிறுநீர்கழிக்கவைத்தல்
இன்னும் பல இப்போது கூறுங்கள் யார் தீவிரவாதி என்று?
இந்நிலையில் மே 20ம் திகதி அவர் அமெரிக்கச் சிறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்தத் தகவல் உலகளாவிய ரீதியில் பெரும்பாலான மக்களை பெரும் ​சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Image result for dr.aafia siddiqui death news

Related image
டொக்டர் ஆபியா சித்திக்கீ அமெரிக்கச் சிறையில் மரணம்? டொக்டர் ஆபியா சித்திக்கீ அமெரிக்கச் சிறையில் மரணம்? Reviewed by NEWS on May 21, 2018 Rating: 5