புனித றமழான் முதல் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ரிசாத் ஆகியோர் இணைந்து பயணிக்க திட்டம்!உலகத்தில் சிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம், அதனை அணு அளவும் தவறாமல் பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாம் குரோதங்களாலும், துரோகத்தாலும் அரசியல் எனும் வியாபாரத்தை செய்வது அழகல்ல இலங்கையை பொறுத்தவரை சிறுபான்மை சமூகமாகவுள்ள முஸ்லிம்கள் இரண்டு கட்சிகளாக பிரியாமல் ஒருமித்து செயற்படுவதன் மூலம் நமக்கான பலத்தை நிரூபிக்க முடியும்,

தமிழர்கள் அதனை நிரூபித்துள்ளனர், ஆனால் நாங்கள் தவறிவிட்டுள்ளோம், கட்சிகள் இரண்டு இருந்தாலும் கூட்டமைப்பாக இணைந்து நாங்கள் செயற்படுவது எங்கள் எதிர்காலத்திற்கு வளமுள்ளதாக அமையும்.

இலங்கையில் இரண்டு பெரிய முஸ்லிம்கட்சிகள் இருக்கின்றன ஒன்று முஸ்லிம் காங்கிரஸ், இரண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவை இரண்டும் இணைந்து செயற்பட்டாலே நமக்கான பல தீர்வுகள் கிடைக்கும்.

இந்த றமழானில் இருந்தாவது அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ரிசாத் ஆகியோர் பேச்சுவார்த்தை நடாத்தி இணைந்து செயற்படுமாறு புலம்பெயர் முஸ்லிம் முற்போக்கு அமைப்பு கேட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...