சட்டத்திற்கு விரோதமாக செயற்படும் அரசாங்கம்!

Image result for g.l. peiris

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமான அரசாங்கம் எனவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நாட்டை ஆட்சி செய்ய முயற்சிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டை சரியாக ஆட்சி செய்ய முடியாது என்பதை அரசாங்கம் தெளிவாக ஒப்புவித்து காட்டியுள்ளது.

இதனால், முழு அரசாங்கம் பதவி விலக வேண்டும். அதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளன.

அரசாங்கம் மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட அரசாங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியை பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...