ஊடகங்களை புறக்கணிப்பது நமக்கு நாமே கொள்ளிவைப்பது போன்றதாகும்
இலங்கையில் முஸ்லிம்கள் வசம் எந்தவொரு ஊடகங்களும் இல்லாத போது நாம் இதர தமிழ் ஊடகங்களை எதிர்ப்பது முட்டாள்தனமானது என புலம்பெயர்  முஸ்லிம் முற்போக்கு அமைப்பின் தலைவர்  முஸ்தபா முஹம்மட் வபா குறிப்பிட்டுள்ளார்.

இன்று சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை அவர் எழுதியுள்ளார் மேலும் அந்த அறிக்கையில்,

அக்கரைப்பற்றை சேர்ந்த ஒரு சிறு அரசியல்வாதி முகப்புத்தகத்தில் அறிக்கை விடுவதனால் நமக்கான ஊடகம் ஒன்றினை உருவாக்க முடியாது அதுபோல அவர் எதிர்ப்பதால் சக்தி எனும் ஊடகத்தை நிறுத்தவும் முடியாது, ஏன் அவர் அறிக்கை விடுகிறார் என்றால் அவர் பிரபல்யம் அடைவதற்காக, அவர் சார்ந்திருக்கும் கட்சியே அவரை முன்னிலைப்படுத்துவதில்லை அவருக்கு குறைந்த பட்சம் பிரதி மேயராவது வழங்கவில்லை இது ஒரு சோகக்கதை, பல அரசியல் தலைவர்களிடம் அரசியல்  பிச்சை கேட்டும் அவருக்கு கிடைக்கவில்லை,

அவரின் தலைவரின் பேனரை அவர் காலால் மிதித்தவர். இது ஒருபுறமிருக்க சபீஸ் அவர்கள் ஒரு” சில விசமிகளின் கதைகளை கேட்டு பிரமாண்டமான உரு ஊடகத்தை எதிர்ப்பதால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒட்டுமொத்தமான பாரிய விளைவுகள் ஏற்படலாம். சக்தி அரசை எதிர்க்குமளவுக்கு ஒரு தனியார் ஊடகம், கடந்த காலங்களில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி குறித்த நிறுவனத்தை எதிர்த்தால் முஸ்லிம்களின் செய்திகளை கூட காணவில்லை, தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் தேசிய ஊடகங்களை எதிர்த்து எதனையும் சாதித்துவிட மாட்டாம்.

இப்படி எதிர்ப்பவர்களிடம் ஒரு ஊடகம் செய்ய ஒரு இலட்சம் பணம் கேட்டுப்பாருங்கள் தருவார்களா என்று? அவ்களால் இணைய ஊடகத்தை தொடர்ந்து நடாத்த முடியாது. அப்படியானவர்கள் தான் ஊடகங்களை எதிர்க்கிறார்கள். அப்படி எதிர்ப்பதானால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவும் முடியாது.

ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இன்று இலங்கையில் இல்லை, அது உலகத்திலும் இல்லை என்பதை புரிந்து நாம் நடப்போமாக. நமக்கான ஒரு ஊடகம் இல்லாதவரைக்கும் நமக்கான அடையாளமும் இல்லாமலே இருக்கும்.

ஊடகங்களை புறக்கணிப்பது நமக்கு நாமே கொள்ளிவைப்பது போன்றதாகும் ஊடகங்களை புறக்கணிப்பது நமக்கு நாமே கொள்ளிவைப்பது போன்றதாகும் Reviewed by NEWS on May 23, 2018 Rating: 5