சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இறுதிக்கிரியைகளுக்காக 15ஆயிரம் ரூபா நிதி பிரதேச செயலாளர் , கிராமசேவகர் ஊடாக உடனடியாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திரண தெரிவித்துள்ளார்.

எஞ்சிய தொகை 85 ஆயிரம் ரூபா சம்பந்தப்பட்டவரின் மரணச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இழப்பீட்டுத்தொகை இரண்டு கட்டங்களில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: