பெற்றோலியத்துறை பொது ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு!

NEWS
0 minute read
0
Image result for petrol

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடைந்து வரும் 7300 மில்லியன் நஷ்டத்தில் எந்தவித குறைவும் ஏற்பட வில்லையென பெற்றோலியத்துறை பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் டீ.ஜே. ராஜகருனா தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்தைக் காட்டி எரிபொருள் விலையைக் கூட்டியபோதிலும் கூட்டுத்தாபனத்துக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோயாளின் நோயைக் சுகப்படுத்தவென பணம் சேகரித்து விட்டு, நோயாளியை சாகவிட்டுவிட்டு, பணத்தை சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டது போன்ற ஒரு நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
To Top