இறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை


எஸ்.எம்.சன்சீர்

சென்ற வருடம் சிறி லங்கா முஸ்லிம் கங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இறக்காமம் பிரதான வீதியினை காபட் இடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதே வருடம் இறுதிக்குள் வேலைத்திட்டம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒப்பந்த்தின் கீழ் பணிகள் ஆரம்பிக்பட்டது.

இருந்த போதும் இது வரைக்கும் இக்காபட் வீதியானது அசமந்த நிலையில் கிடப்பதாகவும் இதனால் போக்குவரத்து இடைஞ்ஞலக உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக வீதி ஒப்பந்தக் காறர்களை  தொடர்பு கொண்டு கேட்ட போது சென்ற வருடம் காபட் வீதிக்கான 86 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது அந்தநிதி அதே வருடத்தில் வீதிக்கான வேலைத்திட்டம் முடிவுற வேண்டும் என்ற ஒப்பத்தந்தின் கீழ் எமக்கு வழங்கப்பட்டிருந்தது.  


இருந்தபோதும் எமது வேலைத்  திட்டங்களுக்கு இடையு றாக இருக்கின்ற சட்டவிரசட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வீதியின் நடுவில் உள்ள மின் கம்பங்கள்,டெலிகொம் கம்பம் ஆகியவற்றினை அகற்றுவதற்க்கு நாங்கள் பல தடவைகள் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் ஆகியோரிடம் பேசியிருந்தும் இதுவரைக்கும் எவ்விதமான செயற்பாடுகளும் அவர்களால் முன்னடுக்கப்படவில்லை  இதனால் இன்னும் காலதாமதம் எடுக்கலாம் இதற்கு இறக்காமம் பிரதேச சபையின் அசமந்த நிலையே காரணம் என அவர் பதிலளித்தார்.

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர்,செயலாளர் அவர்களே இது உங்களது கவனத்திற்கு

இந்த வீதிக்கு காபட் இடுவதற்க்கு  தடையாக உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் வீதியின் நடுவில் உள்ள மின் கம்பங்கள்,டெலிகொம் கம்பம் ஆகியவற்றினை அகற்றி காபட் வீதி யினை துரிதப்படுத்த வேண்டும்.
இறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில் பிரதேச சபையின் அசமந்த நிலை இறக்காமம் பிரதான வீதி காபட் இடுவதில்  பிரதேச சபையின் அசமந்த நிலை Reviewed by NEWS on May 30, 2018 Rating: 5