ஐ.தே.கட்சியில் பிரதான நிறைவேற்று அதிகாரியை நியமிக்க தீர்மானம்!

Related image

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் பணிகளை திறனான முறையில் மேற்கொள்வதற்காக பிரதான நிறைவேற்று அதிகாரி ஒருவரை நியமிக்க ஐக்கிய தேசியக்கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு அமைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குழுவின் பரிந்துரைக்கு அமைய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

எந்த அரசியல் பதவிகளையும் வகிக்காத, நாடாளுமன்ற விவகாரங்களில் சம்பந்தப்படாத ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளரின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு முழுமையான உதவிகளை வழங்குவது நிறைவேற்று அதிகாரியின் பொறுப்பாகும் என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்