ஹம்சாவின் முயற்சியினால், ஒலுவில் பிரதேசத்திற்கு 50 இலட்சத்தில் கலாச்சார மண்டபம்


சப்னி அஹமட்- 

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இவ்வருடம் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்ச்சி அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒலுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் எ.எல். ஹம்சா சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே உறுப்பினர் மேற்கொண்ட பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; 

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு குறித்த அமைச்சினால் ஒதுக்கப்பட்ட  50இலட்சம் நிதியினை மக்களுக்கு பிரயோசனமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்,  இப்பிரதேசத்திற்கான ஒரு வளமான கலாச்சார மண்டபம் ஒன்றில்லாமை மிகவும் கவலைக்குறிய விடயம் எனவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு அமைச்சுக்களால் ஒதுக்கப்படும் நிதிகளை மக்களுக்கு நிரந்த நண்மை கிடைக்குமளவு நாம் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என தவிசாளரிடம் உறுப்பினர் சபையில் கேட்டுக்கொண்டார். 

கலாச்சார மண்டபத்தின் தேவை பல நாட்களாக ஒலுவில் மக்களின் மத்தியில் காணப்பட்டது அதனை தற்போது நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் எ.ஏல். ஹம்சா அவர்களிற்க்கு ஒலுவில் மக்கள் மற்றும் பிரமுகர்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...