தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் அமைப்பாளர் மௌலவி ஹாறூன் ஸஹ்வி

அலுவலக செய்தியாளர்  எம்.ஐ அஸ்பாக்
கடந்த பிரதேச சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளரும், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளருமான மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வறிய குடும்பங்களுக்கான சுத்தமான குடி நீர் இணைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்பபடுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடரில் இதுவரை வாழைச்சேனை ஹைறாத் வீதி, மாவடிச்சேனை ஹபீப் கங்காணியார் வீதி, மீராவோடை எம்.பி.சீ.எஸ் வீதி, மீராவோடை பாடசாலை வீதி, உள்ளிட்ட இன்னும் பல நீர் இணைப்பு குழாய்கள் பொருத்தப்பட்டு நீர் விநியோகம் நடைபெரும் பகுதிகளில் இதுவரை சுமார் 100 வறிய குடும்பங்களுக்கு இவ் இலவச குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இவ்வருட முடிவுக்குள் சுமார் 1000 குடும்பங்களுக்கு இக் குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அல்-கிம்மா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் அமைப்பாளர் மௌலவி ஹாறூன் ஸஹ்வி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் அமைப்பாளர் மௌலவி ஹாறூன் ஸஹ்வி Reviewed by NEWS on June 13, 2018 Rating: 5