துருக்கியில் மீண்டும் அர்துகான் வெற்றி்; இஸ்லாமிய சாம்ராஜ்யம் மலர்ந்ததுதுருக்கியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 97.7 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அர்துகான் வெற்றி பெறத் தேவையான 50 சதவீதத்திற்கும்  மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றக் குழுவின் தலைவரான சாடி குவான் தலைநகரான அங்காராவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. இதில்  ஏ.கே. கட்சி சார்பில் தையிப்  அர்துகானுக்கும் , குடியரசு மக்கள் கட்சி சார்பில் முஹாரம் இன்ஸ் ஆகியோருக்கும்  இடையில் போட்டி நிலவியது.
வாக்குகள் 97 சதவீதத்திற்கும் அதிகமாக எண்ணப்பட்ட நிலையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தையிப்  தையிப்  அர்துகானும் 30 சதவீத வாக்குகளை முஹாரம் இன்ஸும் பெற்று இருந்ததாக அரசு ஊடகமான அனடோலூ தெரிவித்தது.
எனினும் இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் துருக்கியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையடுத்து அங்கு கருத்துக் கணிப்பு ஒன்று நடாத்தப்பட்டு அதில் துருக்கி நாடு அதிபர் ஆட்சி முறைக்கு மாற வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்தனர். 
இதற்கமைவாகவே தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட துருக்கியின் முதலாவது ஜனாதிபதியாக அர்துகான் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...