ஞானசாரருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி முஸ்தீபு !!


நாட்டிலுள்ள பிக்குகள் பலரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதியை சந்தித்த தேரர்கள் பலர் எடுத்துக் கூறியபோது, தான் இந்த நிலைமை குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...