சிறையில் புத்தகம் எழுதுகிறார் ஞானசார தேரர்!
June 18, 2018
0 minute read
0
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர் புத்தகம் ஒன்றை எழுதுகின்றார்.
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் புத்தகம் ஒன்றை எழுதத் தொடங்கியுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் ஞானசார தேரர் தற்பொழுது தண்டனை அனுபவித்து வருகின்றார்.
சிங்கள பௌத்த நாட்டில் பௌத்த பிக்குகளுக்கும் பௌத்தர்களுக்கும் நேர்ந்துள்ள கதி மற்றும் ரோம டச்சு சட்டங்கள் எமது நாட்டுக்கு பொருந்துமா என்ற தொனிப்பொருளில் இந்த நூலை ஞானசார தேரர் எழுதி வருகின்றார் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஞானசார தேரர் தம்மை பார்வையிட வரும் எவரையும் சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
<
Share to other apps