லுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள், பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.
ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காது விட்டால், அவருடைய பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
தென்கிழக்கு பல்கலகழக விரிவுரையாளர் எஸ் எம்  ஆலிப் என்பவர்  தனக்கு  பாலியல் லஞ்சம் வழங்காவிட்டால் பரீட்சையில்  சித்தியடைய முடியாது என மாணவிகளிடம் நேரடியாக கூறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

Share The News

Post A Comment: