ஒட்டுமொத்த அம்பாறைக்கும் MP வழங்கும் மக்கள் காங்கிரஸ்


தலைமைகள் ஒவ்வொரு விதமாக மக்களுக்கு தெண்பட்டாலும்இலங்கைமுஸ்லிம்களின் வரலாற்றில் பல தலைவர்கள் கால காலமாக உருவாகியுள்ளனர்,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவரும்அகில இலங்கை மக்கள்காங்கிரஸின் தற்போதைய தலைவரும் தான் இலங்கை முஸ்லிம்களுக்கான குரல்களில்ஓங்கி ஒழித்துகொண்டு வருகின்றனர்அதிலும் குறிப்பாக இன்றைய அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுத்தீன் முதல் நிலை வகிக்கின்றார்

அந்த வகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் பல இடங்களில் கால்தடம் பதித்து 04 பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வசப்படுத்திக்கொண்டு ஒரு தேசியப்பட்டியலையும் தன் வசப்படுத்தி குறுகியகாலத்திற்குள் சாதனை படைத்தவை வரலாறாகும் ஏன் என்றால் 30 வருடக்கட்சியானஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறும்07 (02 தேசியப்பட்டியல்ஆசனங்களைதனாதாக்கியதால் மு.கா வை விட குறுகிய கால கட்சி மக்கள் காங்கிரஸ் சாதனையே

குறிப்பாக மக்கள் காங்கிரஸுக்கு ஒரு தேசியப்பட்டியலும் , முஸ்லிம் காங்கிரஸுக்கு இருதேடியப்பட்டியலும் கிடைத்ததை அடுத்து இரு கட்சிகளுக்கும் பிளவுகளும்,வீண்பேச்சுக்களுமே அதிகரித்து வந்ததுஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இத்தேசியப்பட்டியல்களை பெற்றதும் அத் தலைவரின் விசுவாசத்திற்கு ஏற்றாப்போல்இருவருக்கு உடனடே ‘தற்காலிய’ பதவி என்று  வழங்கி வைத்தார்,  அதிக நாட்கள் மு.காவின் தலைவரின் சகாக்கள் அவ் அதிகாரத்தில் இருந்து இறுதி நேரங்களிலையேஉரியாவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதை அனைவரும் அறிந்ததே

ஆனால் அதைவிட மாற்றமாக மக்கள் காங்கிரஸுக்கு கிடைத்த தேசியப்பட்டியலை சமபங்காக பிர்த்து வழங்கிவைத்தார் அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்அதில் யுத்தகாலங்களில் முஸ்லிம் மக்களுக்கு உதவி இருந்தவரம்பாராளுமன்றதேர்தலில் சொற்ப வாக்களினாலையே பதவியை இழந்தவருமான நவவி ஹாஜியாருக்குபுத்தள மண்ணை கெளரவப்படுத்தும் நோக்கிலும் இத்தேசியப்பட்டியலை இரண்டரைவருடங்களுக்கு அதிகமாக வழங்கி வைத்தார் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன்.  அப்பதவியைமிக கெளரவமான முறையில் சேவை செய்து தனது காலம் முடியும் நேரத்தில் உரியமுறைப்படி இராஜினாமா செய்தார் முன்னாள் உறுப்பினர் நவவி!! 

அதன் பின் குறித்த வெற்றிடத்தினை 32 ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றஅம்பாறை மாவட்ட மக்களுக்கு வாக்குறுதியளித்த படி கெளரவத்தினை வழங்க அமைச்சர்ரிசாத் பதியுத்தீன் முடிவெடுத்தார் அதன் பின் அம்பாறையில் உள்ள கட்சிமுக்கியஸ்தர்களால் , யாருக்கு தேசியப்பட்டியல் என்ற சர்ச்சைகள் எழும்பிய நேரம் கட்சிதலைமையின் முடிவுக்கு கட்சியின் பிரதிநிகள் ஏற்றுக்கொண்டு தலைமையின் முடிவுக்குசெவிசாய்தனர்அவ்வாறு செவிசாய்க்கும் உறுப்பினர்களும்மக்கள் நண்மைகளைகருத்திற்கொண்டே முடிவுகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம் என அக்கட்சியின்முக்கியஸ்தர்கள் கூறினார்கள்ஆனால் இதற்கிடையில் ஒரு கட்சியின்தலைமையக்கத்தில் இருந்தும் சில போலிமுகநூல் இயக்கப்பட்டு அதில் இருந்து மக்கள்காங்கிரஸ் பிரதிநிதிகளை கூட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல்கள்அரங்கேறியிருந்தது

மேலும்அதையெல்லாம் தாண்டி அம்பாறைமாவட்டம்சம்மாந்துறை வீ.சீஇஸ்மாயிலுக்கு இத்தேசியப்பட்டியலை வழங்க மக்கள் காங்கிரஸ் தலைவர்முடிவெடுத்தார்அதனை கட்சியின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொண்டு மக்கள் தலைமைக்குநன்றிகளை செலுத்திவருவதை அவதனிக்க முடிந்தது. 2018.06.03 கொழும்பில் நடைபெற்றமுக்கிய கலந்துரையாடலின் போது முன்னாள் தென்கிழக்கு பல்கழைக்கழக உபவேந்தர்டாக்டர் இஸ்மாயிலுக்கு வழங்க உத்தியோகபூர்வ முடிவெடுக்கப்பட்டதுகடந்தபாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்ற இவருக்கு கட்சி வழங்கமுடிவெடுத்ததுடன் அதனை வர்த்தகமானி அறிவித்த செய்வற்கான ஏற்பாடுகளும்செய்யப்பட்டது

எது எவ்வாறாக இருந்தாலும் குறித்த தேசியப்பட்டியலை எடுக்கும் வீ.சீ இஸ்மாயில் 
 சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தியை கவனத்திற்கொள்ள வேண்டும் அத்துடன் குறித்ததேசியப்பட்டியலை பெற்று ஏனைய வேறு கட்சியில் உள்ள ஒரு சில உறுப்பினர்களைப்போல் அமைதிகாத்த கிளிபோல் அமர்ந்து விடாமல் இவ் அதிகாரம் மூலம் முழு அம்பாறைமாவட்ட மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என நம்புகின்றோம்

தனது உபவேந்தர் பதவியை புகழ்போற்றுமளவு மிகச்சிறப்பாக மேற்கொண்டவருக்குஊழல் மோசடி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தவிடுபொடியானதுடன் முஸ்லிம்காங்கிரஸ் தலைவரால் சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது ‘வீ.சீ இஸ்மாயில்பாராளுமன்றம் சென்றால் தனது காதை அறுப்பதாக கூறியதும்’ நகைப்புக்குறியது 

  • குறித்த பதவியை முழு அம்பாறை மாவட்ட மக்களுக்கும் வழங்கி வைத்த தேசியதலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன் அவர்களுக்கு இளைஞர்கள் சார்பாகநன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் ஏமாற்று அரசியல் செய்யாமல்வாக்குறுதிகள்மாறாத தலைமைக்கு நன்றிகள்
ஒட்டுமொத்த அம்பாறைக்கும் MP வழங்கும் மக்கள் காங்கிரஸ் ஒட்டுமொத்த அம்பாறைக்கும் MP வழங்கும் மக்கள் காங்கிரஸ் Reviewed by NEWS on June 04, 2018 Rating: 5