முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் கலந்துரையாடலில் 6 எம் பி க்களே பங்கேற்பு


முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்­தங்­களில்  முஸ்லிம் பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலர் அக்­கறை கொள்­ளா­துள்­ள­மையை நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டி­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பான கூட்டம் நிரூ­பித்­துள்­ளது.
இச்­சந்­திப்பு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்­றது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்  அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் சந்­திப்பில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே சமு­க­ம­ளித்­தனர். அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ், பிர­தி­ய­மைச்சர் காதர் மஸ்தான், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோரே சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் ஷரீ­ஆ­வுக்கு அமை­வா­கவே இடம்­பெ­ற­வேண்­டு­மென வலி­யு­றுத்­தினர்.
"எமது மூதா­தை­யர்கள் எமக்கு அழ­காக கைய­ளித்து விட்­டுச்­சென்­றுள்ள சட்­டத்தில் கை வைத்து நாம் பழு­தாக்­கி­வி­டக்­கூ­டாது"  என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கருத்தை ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆமோதித்தனர்.

Thanks - Vidivelli
முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் கலந்துரையாடலில் 6 எம் பி க்களே பங்கேற்பு முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் கலந்துரையாடலில் 6 எம் பி க்களே பங்கேற்பு Reviewed by NEWS on July 26, 2018 Rating: 5