புதிய காரியாலய திறப்பும் பொருட்கள் வழங்கும் வைபவமும்

ஹஸ்பர் ஏ ஹலீம்


அல்ஹிம்மதுல் உம்மா பௌன்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று பொருப்பதியாரி  மொஹமட் பாதிஹ் ஹஸாலி அவர்களின் தலைமையில் கிண்ணியா மஞ்சோலைச் சேனை சந்தியில் அமைந்துள்ள ஜனிஸ் சலாம் காட்வெயார் அருகாமையில்( 01) நேற்று ஞாயிற்றுக் கிழமை இவ் நிறுவனத்தின் புதிய காரியாலய திறப்பு விழா இடம்பெற்றது.

இவ் நிறுவனத்தின் காரியாலய திறப்பு விழாவின் அன்றைய  சேவைகளில் ஒன்றான பின்தங்கிய பள்ளிவாயல்கள்,  கோவில்கள், மத்ரசாக்கள் ,பொது நிறுவனங்களுக்கான, நீர்த்தாங்கி வழங்கும் வைபவத்தில். சுமார் 20க்கும் மேற்பட்ட  ஆயிரம் லீற்றர் நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டது.

 மேலும் இவ் நிகழ்வின் போது ரவ்லத்துல் ஹாபிலாத் மகளிர் அரபிக்கல்லூரிக்காண தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டதுடன் வலது குறைந்தோர்களுக்கான சில்லு வண்டிகளும் வழங்கப்பட்டன .

இதில் கிண்ணியா நகரசபை தவிசாளர்   எஸ்.எச்.எம்.நளீம்,,  கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே. எம்.நிஹார்,நகர  சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பள்ளி உறுப்பினர்கள் என்று பலறும் கலந்து சிறப்பித்தனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...