அங்கஜனை நேரில் சென்று வாழ்த்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
விவசாய பிரதியமைச்சராக இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பதவியேற்று தனது பணிகளை ஆரம்பித்துள்ள அங்கஜன் இராமநாதனை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விவசாய பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்ததுடன், அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விவசாய அமைச்சுக்கு நேரில் சென்று பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

அத்துடன், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என துடிக்கின்ற அங்கஜன் இராமநாதன் இந்த அமைச்சின் ஊடாக சிறப்பான பணிகளை ஆற்ற வாழ்த்துவதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அவருக்கு பக்கபலமாக இருப்பதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். 

அங்கஜனை நேரில் சென்று வாழ்த்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கஜனை நேரில் சென்று வாழ்த்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் Reviewed by Unknown on July 11, 2018 Rating: 5