இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்டிப்பு

Unknown
0 minute read
0


( ஐ. ஏ. காதிர் கான் )

   தேசிய விபத்து தடுப்பு வாரம், இன்று (02) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை, நாடளாவியரீதியில் அனுஷ்டிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விபத்து தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 

  இன்று, நாட்டில் கடும் எண்ணிக்கையான அளவில் வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால், அப்பாவிப் பொதுமக்கள் பலர், திடீர் திடீர் என, எதுவித காரணங்களுமின்றி  கொல்லப்படுகின்றார்கள். 

   இவ்வாறு வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் இயன்றளவு குறையவேண்டும். வாகனச் சாரதிகளை அறிவுறுத்துவதற்காகவே, இவ்வாறான தேசிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.

   நாட்டில்  விபத்துக்கள் ஏற்படுவதை இயன்றளவு  தடுப்பதும்,  கூடுதலான விபத்துக்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதுமே, தமது பிரதான இலக்காகும் என, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் பபா பலிஹ வடன குறிப்பிட்டார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)