முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று சைனா ஹாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சைனா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
ஒருபோதும் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்யவில்லை என்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்குமாகவே நிர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
குறித்த சர்வதேச ஊடகம் வௌியிட்டுள்ள செய்தி பொய்யான கருத்துக்களையும், அடிப்படையற்ற தகவல்களையும் வௌியிட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.