பள்ளிவாயலின் புனர்நிர்மாணப்பணிகள் துரிதமாக செய்யப்படவேண்டும் - எஸ்.பஞ்சலிங்கம்


ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா ஆலங்கேணி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயலின் காணி பள்ளமாக காணப்படுவதால் மழை காலங்களில் நீர்தேங்கி நிற்பதுடன்  தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளது இதனை உடனடியாக புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் என நேற்று புதன் கிழமை (25) கிண்ணியா நகர சபையின் நான்காவது சபை அமர்வில் கலந்து கொண்டு தனது பிரேரனைகளில் ஒன்றான இப்பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போது கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எஸ்.பஞ்சலிங்கம் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் அப்பகுதியில் உள்ள பள்ளிவாயலின் பிரதேசம் பள்ளமாக காணப்படுகிறது இதனை உடனடியாக மண் கொண்டு நீர்தேங்கி நிற்காதவாறு உடனடியாக செய்யப்படவேண்டும் அவர்கள் தங்களது தொழுகைகளை தொழுவதற்கு எவ்வித தங்கு தடைகளுமின்றி தொழவேண்டும் மழை காலங்களில் நீர்தேங்கி காணப்படுகிறது இவ்வாறான பிரச்சினைகளை சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் சுதந்திரமாக தங்களது மதக் கடமைகளை செய்வதற்கு பள்ளிக்குச் சென்று நிறைவேற்ற வேண்டும்.மழை காலங்களில் தேங்கி காணப்படும் நீரினால் போக்குவரத்து நடைபாதை பாரிய சிரமத்தை ஏற்படுத்துகிறது எனவே இதனை கௌரவ தவிசாளர் உள்ளிட்ட சபையோரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கிண்ணியா பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகள் எது எப்படியாக இருந்தாலும் எமது வட்டாரங்களில் அதை மேற்கொள்ளும் போது உரிய அரச அதிகாரிகள் தங்களுக்கும் அறிவிக்கவேண்டும்.சகல அரச ஊழியர்களையும் அழைத்து கிண்ணியா நகர சபைக்குட்பட்ட உறுப்பினர்களை கொண்டு தெளிவுபடுத்தப்படவேண்டும் இல்லா விட்டால் மக்களின் மூலமான பின்விளைவுகளை நாங்கள் சந்திக்க நேரிடலாம் வாழ்வாதார திட்டங்களாயினும் சரி மலசலகூட திட்டங்களாயினும் சரி எமது வட்டார உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும் .பயனாளிகளை எங்களுக்கு தெரியாமல் தெரிவு செய்து விட்டு செல்வதனால் மக்கள் ஏனைய பயனாளிகள் எங்களை நோக்கி வருகிறார்கள் தாங்கள் தான் பொறுப்புச் சொல்ல வேண்டும் வாக்களித்த மக்கள் அவர்களுக்கு பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் 

என கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எஸ்.பஞ்சலிங்கம் மேலும் தனது உரையின் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்