அன்சார்

முஸ்லிம் காங்கிரஸ் எனும் மிகப்பெரும் கட்சியை விமர்சித்தால் இன்று பணப்பரிசு லம்பாக கிடைக்கிறது, அத்துடன் பல பதவிகளும் கிடைக்கிறது என்றால் கட்சியின் பலம் குறித்து சற்று யோசித்து பாருங்கள், இதுதான் முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன்,

எமது பிராந்திய செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார், மேலும் கருத்துரைத்த அவர்,

முன்னாள் தவிசாளர் அன்சில், முஸ்லிம் காங்கிரசையும் தலைவரையும் விமர்சித்து பேசி இன்று பதவிப்பரிசு பெற்றுள்ளார் அவருக்கு வாகனமும் வழங்கப்பட்டுள்ளது, அவர் விமர்சித்தது இதனை பெறுவதற்காக தான், ஆனால் மக்களுக்கு அனைத்தும் தெரியும், ஒருபோதும் முஸ்லி்ம் காங்கிரசை மக்கள் துாக்கியெறிய மாட்டார்கள் என்றார்.

Share The News

Post A Comment: