கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணிப்பாளராக ஹஸன் அலால்தீன் ஆளுனரால் நியமனம்(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராக  ஹஸன் அலால்தீன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித் போகொல்லாகமவினால் நேற்று(03) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுனரின் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதத்தை வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக செயலாளராக கடமையாற்றி வரும் இவர் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையின் மூலம்  இனங்களுக்கிடையே இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கிலும் அரசின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவரும் இக்காலகட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை கடந்த ஜந்து வருடங்களாக சப்ரகமுவ மாகாணத்தின் வீதி அபிவிருத்தி அமைச்சர் அதுல ராகுபத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணிப்பாளராக ஹஸன் அலால்தீன் ஆளுனரால் நியமனம் கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணிப்பாளராக ஹஸன் அலால்தீன் ஆளுனரால் நியமனம் Reviewed by Unknown on July 04, 2018 Rating: 5