கடும் கோபமடைந்த ஜனாதிபதி மைத்திரி!

Image result for ஜனாதிபதி மைத்திரி

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கோபமடைந்து காணப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை இலக்கு வைத்து கடுமையான கோபத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.

மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு இலங்கையில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு உரிய அனுமதி பத்திரம் வழங்காமையினால் ஜனாதிபதி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசிய பெற்ரோலிய நிறுவனம் இலங்கையில் தங்கள் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முத்துராஜவெலயில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இங்கு பெற்ரோலிய சுத்திகரிப்பு, மசகு எண்ணெய் தயாரிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக அந்த நிறுவனம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. குறித்த தொழிற்சாலை மலேசியாவின் முன்னாள் பிரதமரினால் கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கு அவசியமாக அனுமதி பத்திரங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை.

இந்த அனுமதி பத்திரம் வழங்குவதற்கு சிறிய காலஅவகாசம் வழங்குமாறு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இன்னமும் காலத்தை வீணடிப்பதில் எந்தப் பயனும் இல்லை. இன்னமும் தாமதப்படுத்தாமல் இன்றே அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கூறியதுடன் கோபமாக கருத்து வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...