பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமை பெற தயாரில்லை!

Image result for தயாசிறி ஜயசேகர
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்​கொள்வதற்குத் தான் தயாரில்லையென, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், தான் அதற்கு அடிப்பணியமாட்டேனெனத் தெரிவித்த அவர், ஒன்றிணைந்த எதிரணியில் இருப்போர் யாரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...