இலங்கை வருகிறார் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவரும், மணிச்சுடர் நாளிதழ் நிர்வாக இயக்குனர் மற்றும் வெளியீட்டாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., ஜுலை 17 முதல் ஒருவார கால சுற்றுப்பயணமாக இலங்கை நாட்டிற்கு செல்கிறார். சென்னையிலிருந்து ஜுலை 17 காலை புறப்பட்டு கொழும்பு விமான நிலையம் சென்றடைகின்றார். அவருடன் மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, மணிச்சுடர் நாளிதழ் திருச்சி மாவட்ட செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடன் செல்கின்றனர்.

இலங்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், இந்திய இலங்கை தொடர்புடைய ஆய்வாளர்கள், இலங்கைவாழ் காயல்பட்டின மக்களை சந்திக்கின்றார். 
ஜுலை 21 காலை கொழும்பில் நடைபெறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பாரத்தின் 22வது வருடாந்திர மாநாட்டில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பாரம் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் இலங்கை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கபீர் ஆசிப் எம்.பி., நிதித்துறை இணையமைச்சர் லசன்தா அழகிய வண்ணா எம்.பி., ஸ்ரீலங்கா பொதுஜன நிரமுன சேர்மன் பேராசிரியர் டி.எல். பிரீஸ், துருக்கி நாட்டு அம்பாசிட்டர் ஹிதுல்கா முஜ்ஜு அதார், இலங்கை தகவல் தொடர்புதுறை டைரக்டர் ஜெனரல் சுதர்சன குணவர்த்தனா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.ஜுலை 21 மாலை இலக்கிய ஆர்வலர் எழுத்தாளர் ஜின்னா சர்புதீன் ஏற்பாட்டில் நூல் வெளியீட்டு விழா நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் சேமுமு. முஹம்மது அலி, அறிவியல் அறிஞர் வழுத்தூர் எம்.ஜே. முஹம்மது இக்பால் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர். இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, மணிச்சுடர் நாளிதழ் திருச்சி மாவட்ட செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, வழுத்தூர் சமூக ஆர்வலர் மற்றும் கவிஞர் எம்.ஜே. முஹம்மது ரவூப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் கூட்டத்திலும், இலங்கை தினகரன் நாளிதழ் லேக் ஹவுசுக்கும், நவமணி நாளிதழின் அலுவலகத்துக்கும், சிலோன் முஸ்லிம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகமான தாருல் ஸலாத்துக்கும், இலங்கை முஸ்லிம் விவகாரத்துறை மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. அலீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் அமைச்சர் ரிஷாhத் பதித்யூதீன் ஆகியோர் களையும் சந்திக்க உள்ளார்கள்.கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. இலங்கை சுற்றுப்பயணத்தில் தண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதோடு இலங்கை வானொலி , வசந்தம் டி.வி., லங்கா காயல் நலமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நவமணி பத்திரிகை ஆசிரியர் அமீன், காவா லங்கா நிர்வாகிகளான ரபீக் ஹாஜியார், தைப்பான், ஷாஜகான் காகா, பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. பாலியல் நண்பர் வி.எம்.ஏ. ஷேக்னா லெப்பை உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.இலங்கை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஜுலை 25 மாலை சென்னை வந்தடைகிறார்.
இலங்கை வருகிறார் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் இலங்கை வருகிறார் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் Reviewed by NEWS on July 17, 2018 Rating: 5