மீண்டும் பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை – இ.பெ.கூ அறிவிப்பு

Image result for இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
முன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிடம் வினவிதற்கிணங்க இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், லங்கா ஐஓசி நிறுவனம் இன்று காலை முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது.
இந்நிலையில் மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதிகரிக்கப்பட்ட புதிய விலைக்கே எரிபொருள் வழங்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...